அமைதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கத் தயாரா? உக்ரைன் முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் விவாதிப்பதில் ஒத்துழைப்பதா இல்லையா என்பதை உக்ரைன் முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
இணைந்து பணியாற்ற
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, எதிர்கால அமைதி ஒப்பந்தம் குறித்த ஒரு குறிப்பாணையில் உக்ரைனுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக இருப்பதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.
மேலும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் சரியான பாதையில் செல்ல அது உதவும். இந்த ஒப்பந்தத்தின் மீதான விவாதங்களில் தீர்வுக்கான கொள்கைகள், சாத்தியமான போர் நிறுத்தத்திற்கான நேரம் மற்றும் வரையறைகள், அதன் கால அளவு உட்பட, அனைத்தும் அடங்கும் என்றார்.
இந்த நிலையில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர்களிடம் கூறுகையில், உக்ரைன் தனது சொந்த சுய பாதுகாப்புக்காக முன்மொழியப்பட்ட குறிப்பாணையில் சாத்தியமான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஒரு ஆக்கபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.
அடிபணியாது
தற்போது முடிவெடுக்க வேண்டியது உக்ரைன் நிர்வாகம் என குறிப்பிட்டுள்ள மரியா ஜகரோவா, இது முக்கியமான தருணம் என சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனுடன் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைகளை புடின் முன்மொழிந்த பிறகு, அவர்களின் ஐரோப்பிய நட்பு நாடுகள் நேரடி உரையாடலை மீண்டும் தொடங்குவதைத் தடுக்க முயற்சித்ததாகவும், ஆனால் இறுதியில் ஐரோப்பியர்கள் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.
புதிதாக அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜகரோவா, ரஷ்யா ஒருபோதும் யாருடைய இறுதி எச்சரிக்கைகளுக்கும் அடிபணியாது என்று கூறியதுடன், போரைத் தொடர ஐரோப்பா உக்ரைனை மீண்டும் ஆயுதபாணியாக்க விரும்பியது தெளிவாகத் தெரிந்தது என்றார்.
கடந்த 2022ல் மூன்று நாட்களில் உக்ரைனைக் கைப்பற்ற இருப்பதாக படைகளை அனுப்பிய ரஷ்யா, தற்போது மூன்று ஆண்டுகளாக போரை முன்னெடுத்து வருவதுடன், உக்ரைன் போரிடுவதை கைவிட்டால் மட்டுமே தாம் போரை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக கூறி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |