உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை எப்போது... போலந்து பிரதமர் சொன்ன தகவல்
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையானது இந்த குளிர்காலத்தில் தொடங்கலாம் என போலந்து பிரதமர் டொனால்டு தஸ்க் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதியிடம்
உக்ரைனை தீவிரமாக ஆதரித்து வரும் போலந்து வெளிநாட்டு அதிகாரிகளுடன் வரவிருக்கும் தொடர் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பதவியை அடுத்த மாதம் ஏற்க உள்ளது. உக்ரைன் ஜனாதிபதியிடம் இந்த விவகாரம் தொடர்பில் பேச இருப்பதாகவும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வியாழக்கிழமை போலந்து வருகைதர இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்ததன் பின்னர், உக்ரைனின் தீவிர ஆதரவாளராக போலந்து மாறியுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து நேட்டோ அமைப்பிலும் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு
அத்துடன் உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை தங்கள் நாட்டில் இருந்து அனுப்பும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. வியாழக்கிழமை இமானுவல் மேக்ரான் போலந்து வருகைதர இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் தஸ்க்,
பாரிஸ் நகரில் நடந்த பேச்சுவார்த்தை தொடர்பில் மேக்ரான் தகவல் பகிர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை டொனால்டு ட்ரம்ப், ஜெலென்ஸ்கி மற்றும் மேக்ரான் ஆகியோர் பாரிஸ் நகரில் உக்ரைன் தொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது என குறிப்பிட்டுள்ள தஸ்க், பல தலைவர்களுடன் இந்த விவகாரம் தொடர்பில் தாம் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |