இந்தியர்களை மட்டும் குறிவைத்து தாக்கும் உக்ரைன் மக்கள்! காரணம் இதுதான்... அதிர்ச்சி விலகாமல் பேசிய தமிழர்
உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் கொல்லப்பட்ட நிலையில் அங்குள்ள தமிழகத்தை சேர்ந்த மற்றொரு மாணவர் பாலமுருகன் நாட்டில் உள்ள நிலவரம் குறித்து பேசியுள்ளார்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கார்கிவ்வை விட்டு வெளியேற ரயில் நிலையம் சென்றபோது ரஷ்ய படையினரின் குண்டுவீச்சில் இந்திய மாணவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள தமிழரான பாலமுருகன் என்ற மாணவர் தொலைபேசி வாயிலாக பேசுகையில், நாங்கள் கார்கிவ்வில் தான் இருந்தோம்.
நிறைய வீடியோ போட்டும் யாரும் எங்களுக்கு உதவவில்லை, இதையடுத்து நான் உள்ளிட்ட 20 பேர் அங்கிருந்து தப்பி உக்ரல் என்ற ஊரில் வீட்டின் பதுங்கு குழியில் பாதுகாப்பாக தங்கியுள்ளோம்.
ஆனால் அங்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்திய மாணவர்களை உக்ரைன் மக்களும், பொலிசாரும் தாக்குகின்றனர்.
ரயிலில் இந்திய மாணவர்களை ஏற்ற மறுக்கின்றனர். உக்ரைன் ராணுவம் எங்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யவில்லை. இங்கிருந்து ஹங்கேரி மற்றும் சொவாகியா எல்லை எங்களுக்கு சிறிது தூரம் தான்.
எந்த எல்லை வழியாக செல்வது என்பது முடிவாகவில்லை. உக்ரைனை நீங்கள் ஆதரவில்லை, அந்த நாட்டை தானே ஆதரிக்கிறீர்கள் என கூறி இந்தியர்களை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள் என அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.