கோபத்தில் உள்ள உக்ரைன் பொதுமக்களிடம் தனியாக வந்து சிக்கிய ரஷ்ய வீரருக்கு நேர்ந்த நிலை
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் தெற்கில் உள்ள முக்கிய நகரமான Melitopol-ஐ ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த போர் தாக்குதல் காரணமாக உக்ரைன் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிர் பிழைக்கவும், வாழ்வாதாரத்துக்காகவும் அவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்களில் ஒருவர் அந்நாட்டு பொதுமக்களிடம் சிக்கியிருக்கிறார்.
இதையடுத்து அவரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி போனார் அவர், இது தொடர்பான வீடியோ தீயா பரவி வருகிறது.
ரஷ்ய வீரரை பிடித்து உக்ரைன் பொதுமக்கள் தாக்குதல் pic.twitter.com/bVINALc6Mw
— DON Updates (@DonUpdates_in) February 26, 2022