உக்ரைனின் மரியாபோல் நகர தெருக்களில் மனித உடல்களாக காணப்படும் அவலம்! தவிக்கும் மக்கள்
உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 12வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த சண்டையால் 11 நாட்களில் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர்.
போரில் இருந்து தப்பித்து 15 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைனின் துறைமுக நகரங்களை முனைப்பு காட்டி வருவதால் அங்கு சிக்கி தவிக்கும் மக்கள் எங்கும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மரியாபோல் நகர தெருக்களில் மனித உடல்களாக காணப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் காரணமாக உயிரிழப்புகளோடு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளையும் உக்ரைன் சந்தித்துள்ளது. உணவு, குடிநீர் கிடைக்காமல் அப்பாவி மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு கிடைக்க வேண்டும் என்பதே உலகளவில் எதிர்பார்ப்பாக உள்ளது.