ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் வெடித்த போராட்டம்: பரபரப்பு வீடியோ காட்சிகள்
ரஷ்ய ராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உக்ரைனின் முக்கிய நகரமான கெர்சனில் உள்ள நோவா ககோவ்கா (Nova Kakhovka) பகுதியில் பொதுமக்கள் பேரணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
உக்ரைனின் ரஷ்ய ராணுவம் கடுமையான ஷெல் மற்றும் ஆயுத தாக்குதலை மேற்கொண்டு நாட்டின் முக்கிய தெற்கு பகுதியான கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளனர்.
மேலும் உக்ரைன் மீதான தாக்குதலை 11வது நாளாக தொடர்ந்து முன்னகர்த்தி தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Rally in Nova Kakhovka, the city is under #Russian occupation pic.twitter.com/zNth3EMorY
— NEXTA (@nexta_tv) March 6, 2022
இந்த நிலையில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கெர்சன் நகரின் நோவா ககோவ்கா பகுதியில் உக்ரைன் பொதுமக்கள் பெருமளவுகூடி ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பேரணி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ள பொதுமக்கள் கையில் உக்ரைன் தேசியக்கொடியை ஏந்தியவாறு ரஷ்ய ராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், உக்ரைனில் விரைவில் அமைதி திரும்ப பிராத்தனையும் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த போராட்டமானது ரஷ்ய தளவாடங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
Rally in #Kherson
— NEXTA (@nexta_tv) March 6, 2022
Old woman paring for stops this all as soon as possible and in the background people boo #Russian military equipment pic.twitter.com/nCayWbCE3b