அடுத்த 40 நாட்களுக்கு.,ரஷ்யா மீது மிகப்பெரிய தாக்குதல்: ஜெலென்ஸ்கி விடுத்த எச்சரிக்கை
அடுத்து வரும் 40 நாட்களுக்கு ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், ரஷ்யாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உக்ரைனிய ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளார்.
இதன் படி, அடுத்து வரும் 40 நாட்கள் உக்ரைனின் மிகத் தீவிரமான தாக்குதலை ரஷ்யாவிற்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஜெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைனிய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் யெவ்ஹெனி க்மாரவுடன் நடந்த முக்கிய ஆலோசனைக்கு பிறகு ஜெலென்ஸ்கி இதனை அறிவித்துள்ளார்.
இந்த புதிய தாக்குதல் திட்டத்தை உக்ரைனிய இராணுவம் தலைமை தாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக போரின் முன்கள வரிசையில் உக்ரைனிய ட்ரோன்கள் சிறந்த பங்களிப்பை செய்து வருவதாக ஜெலென்ஸ்கி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
எரிசக்தி உள்கட்டமைப்புகள் குறி
உக்ரைனிய ராணுவம் முன்னெடுத்து வரும் ட்ரோன் தாக்குதலில் பெரும்பாலானவை ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்களை குறிவைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எரிசக்தி உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதால் ரஷ்யாவின் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இதன் மூலம் ரஷ்யாவின் தளவாட போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நிலைத்தன்மையும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |