உக்ரைன் பிரதமர் ராஜினாமா... மாற்றியமைக்கப்படும் கேபினட்
உக்ரைன் ஜனாதிபதி கேபினட்டில் மாற்றம் செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உக்ரைன் பிரதமர் ராஜினாமா...
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, கேபினட்டில் மாற்றங்கள் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

ரஷ்யாவுடனான போரின்போது மேம்படுத்தப்பட்ட அரசியல் வியூகத்தை நடைமுறைப்படுத்த இந்த மாற்றங்கள் தேவை என்று கூறியிருந்தார் அவர்.
அதன் தொடர்ச்சியாகவே உக்ரைன் பிரதமரான யூலியா (Yulia Svyrydenko) தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விடயம் என்னவென்றால், உக்ரைனைப் பொருத்தவரை, பிரதமர் ராஜினாமா செய்தார் என்றால், அவரைத் தொடர்ந்து முழு அமைச்சரவையும் ராஜினாமா செய்யவேண்டும்.
யூலியா பிரதமராவதற்கு முன், நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்தவர் ஆவார்.
யூலியா, வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க உக்ரைன் கனிமங்கள் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியதன் மூலம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |