சீன ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய உக்ரைன் ஜனாதிபதி: ரஷ்யா எரிச்சல், அமெரிக்கா வரவேற்பு
உக்ரைன் போரைத் தொடர்ந்து பல நாடுகளும் சீனா பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிவருகின்றன.
பிரான்ஸ், ஜேர்மனி முதலான நாடுகள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆர்வம் காட்டிவரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதியும் சீன ஜனாதிபதியை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
சீன ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய ஜெலன்ஸ்கி
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன், தான் நீண்ட மற்றும் அர்த்தமுள்ள ஒரு உரையாடலை மேற்கொண்டதாக க்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு புதிதாக தூதர் ஒருவரையும் நியமித்துள்ளார் ஜெலன்ஸ்கி. ஆக, சீன ஜனாதிபதியுடனான உரையாடலும், தூதர் நியமனமும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி.
ரஷ்யா, அமெரிக்காவின் ரியாக்ஷன்
உக்ரைன் ஜனாதிபதியும் சீன ஜனாதிபதியும் உரையாடல் மேற்கொண்ட விடயம் ரஷ்யாவுக்கு எரிச்சலையூட்டியுள்ளதுபோல் தெரிகிறது.
உக்ரைன், சமாதான முயற்சிகளை வலுவிழக்கச் செய்வதாகவும், உக்ரைன் அதிகாரிகளும் அவர்களை கவனித்துக்கொள்ளும் மேற்கத்திய நாட்டவர்களும் சமாதான முயற்சிகளை குழப்பும் திறன்கொண்டவர்கள் என்பதை ஏற்கனவே காட்டியுள்ளார்கள் என்றும் ரஷ்ய தரப்புதெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், உக்ரைன் சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான தொலைபேசி உரையாடலை வரவேற்பதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
I had a long and meaningful phone call with ?? President Xi Jinping. I believe that this call, as well as the appointment of Ukraine's ambassador to China, will give a powerful impetus to the development of our bilateral relations.
— Володимир Зеленський (@ZelenskyyUa) April 26, 2023