ரஷ்யாவின் அழைப்பை நிராகரித்தது உக்ரைன்
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பின்தளமாக செயல்படும் பெலாரஸில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ரஷ்யாவுக்கு பதிலளித்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான விளாடிமிர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க உக்ரைன் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
அதாவது, பெலாரஸின் ஹேமால் நகரில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது.
மேலும் இதுகுறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யாவின் உடந்தை நாடான பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள முடியாது.
போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட், அல்லது பாக்கூ, பிராடிஸ்லாவா போன்ற சில நகரங்களின் பட்டியலைக் கொடுத்து இங்கு ஏதாவது ஓரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்துள்ளார்.
மேலும் உலகம் முழுவதிலும் இருந்து வரும் ஆதரவாளர்களை கொண்டு உக்ரைன் சுதந்திர படையை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.