உக்ரைன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை: உறவு வலுப்பட்டதாக அறிவிப்பு
உக்ரைனில் போர் எட்டாவது நாளாக தொடரும் நிலையில், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே உடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தீவர தாக்குதல் நடத்தி வருவதால் அதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் போருக்கு எதிரான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் சில நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகள் உக்ரைனிக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தது. இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே உடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.
Talked to ?? President Moon Jae-in @moonriver365. Informed about counteraction to Russia. About the crimes of the aggressor. Thanked ?? for supporting ?? and imposing sanctions. We will continue to work together building an anti-war coalition around the world.
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 3, 2022
இந்த பேச்சுவார்த்தையில், தற்போதைய போர் சூழல் குறித்தும், ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடை ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்ததற்கும், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை தென் கொரியா மேற்கொண்டததற்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் போருக்கு எதிரான உக்ரைன், தென் கொரியா ஆகிய இரு நாட்டுடனான உறவும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.