உக்ரைன் மக்கள் ரஷ்ய பேரரசின் கீழ் இருக்க விருப்பமா?
உக்ரைன் மக்கள் ரஷ்ய பேரரசின் கீழ் இருக்க விரும்பவில்லை என்று உக்ரேனிய பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கூறியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 58 நாட்களாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து கண்டனங்களை தனது பேட்டிகளின் மூலம் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் பிளிங்கென்னுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், உக்ரைன் மக்கள் ரஷ்ய பேரரசின் கீழ் இருக்க விரும்பவில்லை.
உக்ரைனிய மக்கள் நாகரீக உலகம் என்றழைக்கப்படும் ஐரோப்பாவின் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறார்கள்.
ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு பலத்த ஆதரவளிக்கும் அமெரிக்காவுக்கு நன்றி என கூறியுள்ளார்.