ட்ரம்ப் ஆயுதங்கள் வழங்க மறுத்தால்... ரஷ்யா மீது: உக்கிரமான முடிவெடுக்கவிருக்கும் உக்ரைன்
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் உக்ரைனுக்கு எதிராக செயல்படத் தொடங்கினால், ரஷ்யா மீது உக்கிரமான முடிவெடுக்க இருப்பதாக உக்ரைன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாகசாகியில் பயன்படுத்தப்பட்ட
உக்ரைனால் சில மாதங்களில் அணு ஆயுதங்களை உருவாக்க முடியும் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள் தரப்பு, அது டொனால்டு ட்ரம்ப் ஆட்சியின் செயல்பாடை பொறுத்து அமையும் என்கிறார்கள்.
1945ல் ஜப்பானின் நாகசாகியில் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சொல்ல முடியாத அளவுக்கு சேதத்தை உக்ரைனால் ரஷ்யாவில் ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் ராணுவ அதிகாரிகள், உளவு அமைப்புகள், ராணுவ நிபுணர்கள் குழு ஒன்று விரிவான திட்டம் ஒன்றையும் இது தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு பகிர்ந்துள்ளனர்.
ஆனால், ரஷ்யா - உக்ரைன் போரில் அணுகுண்டு பயன்படுத்தப்பட்டால், அது இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல முழு மனித இனத்திற்கும் வாழும் பூமிக்கும் முழுமையான பேரழிவாக மாறக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
மே மாதம் ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு தலைவர்கள் இருவர் எழுதிய கட்டுரை ஒன்றில், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இறங்கினால் மட்டுமே அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதைத் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
என்னவேண்டுமானாலும் நடக்கலாம்
இதே கருத்தை முன்மொழிந்துள்ள ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை தம்மால் ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றார். ட்ரம்பின் ஆலோசகரான Bryan Lanza சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் உக்ரைனுக்கு எதிராகவே அமைந்துள்ளது.
இதனால் ட்ரம்ப் ஆட்சியில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில், உக்கிரமான முடிவெடுக்கும் நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனில் இன்னும் செயற்பாட்டில் உள்ள ஒன்பது அணு உலைகள் உள்ளன.
மட்டுமின்றி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அணுசக்தி நிபுணர்களும் உள்ளனர். அணு உலைகளுக்கு போதுமான 7 டன் அளவுக்கு புளூட்டோனியம் உக்ரைன் வசம் உள்ளது. இதனால், சில மாதங்களில் அவர்களால் அணுகுண்டு ஒன்றை உருவாக்க முடியும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் பத்தில் ஒருபங்கு வலிமை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது முழு ரஷ்ய விமான தளத்தையும் அல்லது குவிக்கப்பட்ட இராணுவ, தொழில்துறை அல்லது தளவாட நிறுவல்களையும் அழிக்க போதுமானதாக இருக்கும் என்றே நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து இதுவரை உக்ரைன் அரசாங்கம் கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |