கொல்லப்பட்ட ரஷ்ய தளபதிகள்! வெகுண்டெழுந்த உக்ரைன் மீண்டும் முக்கிய நகரை கைப்பற்றியது... முக்கிய தகவல்
ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி தரமான பதிலடியை கொடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான Chuhuivவை ரஷ்யா சமீபத்தில் தனதாக்கியது.
இந்த நிலையில் விடா முயற்சியுடன் அந்த நகரை மீட்க போராடிய உக்ரைன் தற்போது நகரை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சில முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைனின் ஆயுதப் படைகளின் இந்த தொடர் தாக்குதலை ரஷ்ய வீரர்கள் சமாளிக்க முடியாமல் நகரை இழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்களை விட ரஷ்ய வீரர்களே பல மடங்கு உயிரிழப்புகளையும் காயங்களையும் சந்தித்துள்ளனர்.
கார்கிவ் நகர மையத்திலிருந்து தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் Chuhuiv நகரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.