இதற்கு வாய்ப்பே இல்லை... ரஷ்யா கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த உக்ரைன்
மனிதாபிமான வழித்தடங்களை திறக்க ரஷ்யா விடுத்த கோரிக்கையை உக்ரைன் அதிரடியாக நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 26வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மரியுபோல் நகரில் குண்டுமழை பொழிந்து வருகிறது.
மரியுபோல் நகரில் மோதல் தீவிரமடைந்துள்ளதால், நகர மக்கள் தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், 4 லட்சம் பேர் மரியுபோல் நகரில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ள உக்ரைன் அரசு, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மனிதாபிமான வழித்தடங்களை திறக்குமாறு ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.
அதில், ஆயுதங்களை கைவிட்டு மரியுபோல் நகரில் உள்ள உக்ரேனிய படைகள் அனைத்தும் சரணமடைந்தால், மனிதாபிமான வழித்தடங்களை திறக்க அனுமதிப்பதாக தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலளித்த உக்ரைன் துணை பிரதமர் Iryna Vereshchuk, சரணடைய எங்களுக்கு விருப்பமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்து ரஷ்யா தரப்பிடம் தகவல் தெரிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.