உக்ரைன் மீது சீறிப்பாய்ந்த வடகொரியா ஏவுகணைகள்: அதிரடி காட்டிய உக்ரைனிய படைகள்
ரஷ்யாவின் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை உக்ரைன் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் விமான தற்காப்புப் படைகள் இன்று அதிகாலை ரஷ்யாவின் மிகப்பெரிய அளவிலான ஏவுகணை தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தன.
இந்த தாக்குதலில் உக்ரைன் மீது 93 ஏவுகணைகள் மற்றும் 200 ட்ரோன்களை ரஷ்யா ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
💥 Ukrainian air defense forces intercepting Russian cruise missiles over the country early this morning!
— NEXTA (@nexta_tv) December 13, 2024
Ukrainian forces intercepted 81 missiles and 185 drones, with F-16 jets playing a significant role.
The assault reportedly cost Russia over $1 billion. pic.twitter.com/i27uWNjcNF
அதில், ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரைனின் மீது வடகொரிய தயாரிப்பு ஏவுகணைகள் உட்பட 93 ஏவுகணைகள் மற்றும் 200 ட்ரோன்களை வீசினர் என தெரிவித்துள்ளார்.
மேலும் “இது தங்கள் ஆற்றல் அமைப்பு மீதான மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய தாக்குதலை முறியடித்த உக்ரைன்
அத்துடன் ரஷ்யாவின் இந்த மிகப்பெரிய அளவிலான தாக்குதலை உக்ரைனியப் படைகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணைகளில் 81 ஏவுகணைகளை உக்ரைனிய படைகள் வீழ்த்தியுள்ளன.
Zelenskyy: occupiers fired 93 missiles and 200 drones at Ukraine
— NEXTA (@nexta_tv) December 13, 2024
At least one of the missiles is North Korean, specified the President of Ukraine.
“We managed to shoot down 81 missiles, of which 11 cruise missiles were destroyed thanks to our F-16s. [...] This is one of the… pic.twitter.com/Xt7nv0QEyc
இதில் 11 குருஸ் ஏவுகணைகள் புதிதாகப் பெறப்பட்ட F-16s போர் விமானங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |