புலம்பெயர்ந்தோரை ஏமாற்றி போர்க்களத்திற்கு அனுப்பும் ரஷ்யா: வெளியான புதிய அறிக்கை
ரஷ்யா ஆப்பிரிக்கர்களை ஏமாற்றி போர்க்களத்திற்கு அனுப்புவதாக உக்ரைன் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
2,965 ஆப்பிரிக்க குடிமக்கள்
கடந்த பிப்ரவரி மாதத்தில், 36 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள் புடினின் இராணுவத்தில் பணியாற்றுவதை அடையாளம் கண்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இதுவரை இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள 2,965 ஆப்பிரிக்க குடிமக்களை அடையாளம் கண்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் சேரத் தூண்டப்படுகிறார்கள்
உக்ரைனின் 'மூலோபாய தகவல் தொடர்பு மையம்' வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில்,
வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி ஆப்பிரிக்கர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேரத் தூண்டப்படுகிறார்கள்; ஆனால் இறுதியில் அவர்கள் உக்ரைன் போரின் முன்னணிக் களங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு 'பீரங்கித் தீனியாக' பயன்படுத்தப்படுகிறார்கள்.

விளையாட்டு நிகழ்வுகள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் வேலைவாய்ப்பு முகமைகள் ஆகியவற்றின் போர்வையில், ஆப்பிரிக்க ஆண்களை ரஷ்யாவிற்கு வரவழைக்க மாஸ்கோ சூழ்ச்சி செய்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த ஊதியம் பெறும் தொழிலார்களைத் திரட்டி, அவர்களை சுரண்டுவதற்கு நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் புலம்பெயர்வு வழிமுறைகளையும், ஆள் சேர்ப்பவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |