உக்ரைன், அமெரிக்காவுடன் ரஷ்யா முத்தரப்பு பேச்சுவார்த்தை: இடத்தை அறிவித்த பெஸ்கோவ்
ukraine, russia and usa trilateral peace talks: அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையை நவம்பரில் நடத்த ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரப்படுத்தப்பட்ட இராஜதந்திர முயற்சிகளின் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை முன்மொழியப்பட்டது.
அதற்காக செவ்வாயன்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களை ஓஸ்லோவில் அமெரிக்க தூதர் விட்காஃப் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) அவர் சந்தித்தார்.
டிமித்ரி பெஸ்கோவ்
இந்த நிலையில், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அதன்படி, அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் நவம்பரில் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
