ரஷ்யர்கள் சூறையாடி விட்டுச்சென்ற நகரம்: கோரமான காட்சிகளை பார்த்து கண்கலங்கிய ஜெலென்ஸ்கி
உக்ரைனில் புச்சா நகரத்தில் இறந்தவர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்த ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
ரஷ்ய துருப்புக்கள் அப்பகுதியில் இருந்து பின்வாங்கிய பிறகு, அங்கு நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களை உக்ரேனியப் படைவீரர்களுடன் ஜனாதிபதி Volodymyr Zelensky திங்கட்கிழமையன்று ஆய்வு செய்தார்.
தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்களில் 410 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 300 பேர் புச்சாவில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரில் நேற்று 57 உடல்கள் கொண்ட பாரிய புதைகுழி கண்டெடுக்கப்பட்டது.
Image: Reuters
பலியானவர்களில் பலர், நெருங்கிய துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், துண்டிக்கப்பட்ட கைகால்கள், கட்டப்பட்ட கைகள் மற்றும் சித்திரவதையின் அறிகுறிகளுடன் காணப்பட்டனர்.
நேற்று மாலை மேலும் 5 பேரின் உடல்களும் அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து புச்சாவிலிருந்து பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அவரது துருப்புக்களும் செய்த போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்று சபதம் செய்தார்.
Image: Anadolu Agency via Getty Images
அவர் கூறியதாவது: பேசுவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது, இங்கு அவர்கள் செய்ததை பார்த்தால் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம். ஒவ்வொரு நாளும் நாங்கள் பீப்பாய்கள், பாதாள அறைகள் மற்றும் எல்லா இடங்களிலும் மக்கள் செத்துக்கிடப்பதைக் காண்கிறோம், சிலர் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளனர், சிலர் உயிருடன் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர், என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இவை போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்று உலகமே அங்கீகரிக்கும், இன்று நீங்கள் இங்கு வந்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Image: AFP via Getty Images
ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட, அவயவங்கள் துண்டிக்கப்பட்ட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகள், கொலை செய்யப்பட்ட குழந்தைகளை நாங்கள் அறிவோம். இது ஒரு இனப்படுகொலை என்று நான் நினைக்கிறேன்.
இந்த நவீன நகரத்திற்கு என்ன செய்யப்பட்டது என்பதை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம். இதுதான் ரஷ்ய வீரர்களின் பண்பு - விலங்குகளை விட மக்களை மோசமாக நடத்தியுள்ளனர்" என்று கூறினார்.