456 உக்ரைன், 126 ரஷ்யா: எல்லையில் வெடித்த சண்டை: கொல்லப்பட்ட 17 பேர்
உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்த ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா எல்லையில் தீவிர சண்டை
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் எல்லையில் நடந்த கடுமையான ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் குறைந்தது 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் டாடர்ஸ்தான்(Tatarstan) பகுதியில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
டாடர்ஸ்தான் பகுதியில் ரஷ்யாவின் முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாகவும், இங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உக்ரைனின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகின்றன. சமீபத்திய 75 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக அப்பிராந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் தாக்குதலை தொடர்ந்து டாடர்ஸ்தான் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை ஒன்றில் இருந்து கரும்புகை எழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உக்ரைனிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Nizhnekamsk என்ற தொழில்துறை நகரத்தை வெற்றிகரமாக தாக்கி இருப்பதாக கீவ் உறுதிப்படுத்தியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்
நேற்று இரவு மட்டும் கிட்டத்தட்ட 456 உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய 126 ட்ரோன்களை உக்ரைனிய விமானப்படை இடைமறித்து அழித்து இருப்பதாக அறிவித்துள்ளது.
உக்ரைனின் எல்லைப் புற நகரமான கார்கிவ்-வில் ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |