ரஷ்யா - உக்ரைன் சண்டை! உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும்... பல நாடுகள் கவலை
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடப்பதால் உலக பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.
உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் போர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் நடவடிக்கை துவங்கி விட்டதாக அறிவித்த நிலையிலேயே ராணுவ வீரர்கள் தாக்குதலை துவக்கினர்.
உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க், மைக்கோல், மரியூபோல், ஒடேசா, கார்கிவ் நகரங்களில் பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இரு நாடுகளின் போர் காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.
இதையடுத்து போரை நிறுத்த உலக நாடுகள் உதவிட வேண்டும் என உக்ரைன் உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய போர் துவக்கத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.