புடின் நரகத்தில் எரிய வேண்டும்! உக்ரைனில் என் அம்மா வசிக்கும் வீடு மீது தாக்குதல்... இளம்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கிய நிலையில் அங்குள்ள தனது வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளதாக இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புடின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது.
இந்த தாக்குதலை உக்ரைன் எதிர்கொள்ளும் எனவும் புடினை உலகம் தடுக்க வேண்டும் எனவும் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த நஸ்தியா கோலோடோவா என்ற இளம்பெண் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நரகத்தில் புடின் எரிய வேண்டும்! என் அம்மா இன்னும் வசித்து வரும் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவளுடனான எனது ஸ்கைப் இணைப்பை 7 நிமிடங்களுக்கு முன்பு இழந்தேன் என பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.
Putin burn in hell! Explosion by my childhood home, where my mom still lives. I lost my skype connection with her 7 minutes ago... #StandWithUkraine @ kharkiv, Ukraine pic.twitter.com/VZnm72FsYU
— Nastya Kholodova (@nastya_k) February 24, 2022