பழுதாகி நின்ற ரஷ்ய டாங்கி., வம்படியாக அழைத்து அசிங்கப்படுத்திய உக்ரைனியர்! வைரலாகும் வீடியோ
டாங்கியில் எரிபொருள் இல்லாமல் நடுவழியில் தவித்துக்கொண்டிருந்த ரஷ்ய வீரர்களை உக்ரைனிய குடிமகன் துணிச்சலுடன் கேலி செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய இராணுவம் தொடர்ந்து மூணர்த்தாவது நாளாக சனிக்கிழமையும் தாக்குதல் நடத்தினர். ரஷ்ய படைகளுக்கு ஈடாக தலைநகர் கீவில் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து எதிர்தாக்குதல் நடத்திவருகின்றனர்.
உலக நாடுகள் பொருளாதார தடைகள் உட்பட பல தடைகளை விதித்து ரஷ்யாவிற்கு எதிர்ப்பும் கண்டனங்களும் தெரிவித்து வரும் நிலையிலும், உக்ரைனை அரசாங்கத்தை கைப்பற்றியே தீரவேண்டும் என்ற முடிவில் உக்ரைனை சுற்றி அனைத்து திசைகளிலும் தாக்குதல் நடத்த தனது படைக்கு புடின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தாக்குதலுக்கு தேவையான கூடுதலான ஆயுதங்களை உக்ரைன் எல்லைகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உக்ரைனுக்கும் நுழைந்த ரஷ்யா டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் எரிபொருள் இல்லாமல் நின்றுவிட்டன.
அப்படி, தலைநகர் கீவில் தாக்குதல் தடத்திவிட்டு ரஷ்ய எல்லையை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த ரஷ்ய வீரர்கள், தங்கள் டாங்கியில் எரிபொருள் இல்லாமல் பிரேக்டவுன் ஆகி நடுவழியில் நின்றுவிட்டதால் செய்வது அறியாது தவித்துகொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே காரில் வந்த ஒரு உக்ரைனிய குடிமகன், தனது வாகனத்தை நிறுத்தி, ரஷ்யா வீரர்களைப் பார்த்து, "என்ன ஆச்சு பிரேக் டவுனா?" என கேட்டுள்ளார். அதற்கு "ஆமாம், எரிபொருள் தீர்ந்துவிட்டது"என்று அவர்கள் சொல்ல, "நான் வேண்டுமென்றால் உங்கள் டாங்கியை கட்டி இழுத்து (Tow) ரஷ்யா வரை கொண்டுவந்து விடவா?" என கேலியாக கேட்டுள்ளார்.
அதற்கு ரஷ்ய வீரர்களும் சிரித்துள்ளார். மேலும், "சரி எங்கே செல்கிறீர்கள்?" என்று அவர் கேட்க, ரஷ்யர்கள் முதலில் "தெரியவில்லை" என கூறியுள்ளனர். பின்னர் சந்தேகத்துடன் கீவ் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக வீரர்கள் கூறியுள்ளார்.
"ரஷ்ய படையெடுப்பு பற்றிய செய்திகளில் என்ன சொல்கிறார்கள்" என ரஷ்ய வீரர்கள் உக்ரைனியரிடம் கேட்கின்றனர். அதற்கு துணிச்சலாக பதிலளித்த உக்ரைனியர் " எல்லாம் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. உக்ரைன் வெற்றிபெறவுள்ளது. மாஸ்கோவின் துருப்புக்கள் சரணடைவதில் திறமையானவர்கள், ஏனெனில், அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது" என்று அவர்களிடம் கூறுகிறார்.
இந்த விடியோவை அவரே தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.