அடங்காத ரஷ்யாவிற்கு ஆப்பு வைக்க உக்ரைனுக்கு அள்ளி கொடுத்த நாடு! புது தெம்புடன் பதிலடி
ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா பெரியளவில் மீண்டும் கை கொடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், 122-வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில் இப்போதும் 450 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்காக அமெரிக்காவுக்கு உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்த ராணுவ உதவியில் 4 பீரங்கி ராக்கெட் அமைப்புகள், 18 தந்திர உபாய வாகனங்கள், 1,200 கையெறி குண்டு லாஞ்சர்கள், 2 ஆயிரம் எந்திர துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும்.
இது அராஜக போக்கை கையாளும் ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு பெரியளவில் உதவும் என்பதிலும், உக்ரைன் கொடுக்கும் பதிலடி தொடரும் என்பதிலும் சந்தேகமில்லை.