புடின் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்..!உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: டிரம்ப் கருத்து
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புடின் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்
உக்ரைன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன், உக்ரைனிய ஜனாதிபதியும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்.

நாங்கள் இரண்டு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் நாம் எதிர்பார்ப்பதை விட மிக நெருக்கமாக வந்து இருப்பதாகவும், புடினுடனான உரையாடல் நேர்மறையாக இருந்ததாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வாரம் அங்காராவில் நடைபெற உள்ள நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான விவகாரங்கள் முக்கியமான இடத்தை பெறும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |