முடிவு நெருங்கிவிட்டது... கொலை முயற்சியில் தப்பிய புடின் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள்
கொலை முயற்சியில் தப்பினாலும், ரஷ்யாவில் புடினுடைய அதிகாரத்தின் பிடி தளர்ந்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரிகள் மூன்று பேர், புடினைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்கள்.
ஆனாலும், பெண்டகன் வட்டாரத்தைச் சேர்ந்த பெயர் வெளியிடாத அந்த அதிகாரிகள், எப்படி புடின் கொலை முயற்சியில் தப்பினார் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை.
அந்த அதிகாரிகளில் ஒருவர், தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்தவர், ஒருவர் விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி, மற்றொருவர், பாதுகாப்பு உளவுத்துறை ஏஜன்சியைச் சேர்ந்தவர். அவர்கள், எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, புடினுடைய, இல்லாததை இருப்பதைப் போல் கற்பனை செய்துகொள்ளும் paranoia என்னும் மன நலப் பிரச்சினையால் உக்ரைனில் பிரச்சினை மேலும் தீவிரமடையலாம் என்று கூறியுள்ளார்கள்.
அதே நேரத்தில், இதே விடயம்தான் புடின் அணு ஆயுதங்களைப் பிரயோகிக்காமல் இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், புடினுடைய ஆட்சிக்காலத்தில் இதுவரை அவர் இவ்வளவு உக்கிரம் காட்டியதில்லை என்று கூறும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர், முடிவு நெருங்கிவிட்டதை அனைவரும் உணரத் துவங்கிவிட்டார்கள் என்கிறார்.