”மனித குல வரலாற்றில் நாம் மோசமான காலத்தில் இருக்கிறோம்” உக்ரைன்-ரஷ்யப் போரை எச்சரித்த சீனா
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் மூன்றாவது உலகப் போருக்கு வழிவகுத்துவிடும் என சீனா எச்சரித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் போர்
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் சீன பிரதிநிதியான கெங் ஷுவாங்(Geng Shuang) “ரஷ்யா அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பியது பாரிய போரை உருவாக்க காரணமாக அமையும்” என எச்சரித்துள்ளார்.
@Reuters
கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கெங் ஷீவாங்” அணு ஆயுதங்களை போரில் உபயோகப்படுத்த துவங்கினால் உலகம் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்” என கூறியுள்ளார்.
@ap
இதுபற்றி அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு ஆலோசகர் கூறுவதாவது “சீனா புதினை நேரடியாக எச்சரிக்கிறது. மனித குல வரலாற்றில் நாம் மோசமான கட்டத்தில் இருக்கிறோம். பனிப்போரை முடியாமல் இது சரியாகாது” என்கிறார்.
அணு ஆயுத சோதனை
கடந்த மாதம் விளாடிமீர் புதின்(Vladimir Putin) பெலாரஸ் நாட்டுடன் இணைந்து அணு ஆயுதங்களை சோதனை செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.
@ap
பெலாரஸ் நாடு லட்வியா,லித்துனியா, போலாந்து மற்றும் ரஷ்யா போன்ற மேற்கத்திய நாடுகளில் எல்லையை இணைக்கிறது.
சீன பிரதிநிதியான கெங் ஷீவாங் ரஷ்யாவை நேரடியாக கூறாமல் மறைமுகமாக வெளிநாடுகளிலுள்ள அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
@afp
சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் சில தினங்களுக்கு முன் ரஷ்யாவிற்கு சென்று உக்ரைனுடனான போரை பற்றி பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் சீனா போருக்கு எதிராக ரஷ்யாவிற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.