உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் சரமாரியாகத் தாக்கிய ரஷ்யா
ரஷ்யா, உக்ரைன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளது.
உக்ரைன் மீது சாரமாரி தாக்குதல்
வியாழக்கிழமை இரவு, உக்ரைன் மீது 60 ட்ரோன்கள் மற்றும் 5 ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியதாகவும், அவற்றில் 20 ட்ரோன்கள் தங்கள் இலக்கை அடையும் முன்பே அவற்றை தாங்கள் தாக்கி அழித்துவிட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.00 மணியளவில், தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதில், ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பும், ஒரு தேவாலயமும் சேதமடைந்துள்ளதாகவும் உக்ரைன் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், Kryvyi Rih என்னுமிடத்தில் ஒரு ஏவுகணை தாக்கியதில் இரண்டு மாடிக் குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது, ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
இந்த Kryvyi Rih, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |