உக்ரைன் மக்களுக்கு கடும் எச்சரிக்கை! பயங்கர தாக்குதலுக்கு திட்டம்
உக்ரைன் சுதந்திர தினமான 24ஆம் திகதி ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்த திட்டம்.
கார்கிவ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்
உக்ரைன் சுதந்திரம் பெற்ற நாளில் ரஷ்யா பயங்கர தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 24ஆம் திகதி கார்கிவ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 6 மாதங்களாக நீடித்து வருகிறது.
தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா முதலில் முயன்றாலும், தற்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்களிடம் வீழாமல் உள்ள பகுதிகளை உக்ரைன் ராணுவத்திடமிருந்து கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
sky
இந்நிலையில், ஆகஸ்ட் 24ஆம் திகதி உக்ரைன் சுதந்திர தினந்தன்று கார்கிவ் பகுதியில் பயங்கர தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து மக்கள் அனைவரும் வரும் நாட்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு வரும் 24ஆம் திகதி 31வது சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது.