ரஷ்யா நடவடிக்கைக்கு எதிர்வினையாற்ற உக்ரைன் இராணுவம் முடிவு! வெளியான முக்கிய அறிவிப்பு
ரஷ்யா பயிற்சிகளுக்கு எதிர்விளையாற்றும் வகையில் உக்ரைன் இராணுவம் பயிற்சியில் ஈடுபடும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் Oleksii Reznikov தெரிவித்துள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் Oleksii Reznikov, உக்ரைனின் வடக்கி எல்லைக்கு அருகே பெலாரஸில் ரஷ்யா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிர்விளையாற்றும் வகையில் பிப்ரவரி 10ம் திகதி முதல் பிப்ரவரி 20ம் திகதி வரை உக்ரைன் இராணுவம் பயிற்சி மேற்கொள்ளும்.
உக்ரைன் இராணுவ வீரர்கள் தொடர்ந்து பல்வேறு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிப்ரவரி 10 முதல் உக்ரைன் வீரர்கள் வெளிநாட்டு நட்பு நாடுகளால் வழங்கப்பட்ட Bayraktar ட்ரோன்கள் மற்றும் anti-tank Javelin மற்றும் NLAW ஏவுகணைகளைப் பயன்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என Oleksii Reznikov தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லைக்கு அருகே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து ரஷ்யா, கூட்டு பயிற்சியில் ஈடுபட பெலாரஸுக்கு 30,000 வீரர்களை அனுப்பியுள்ளது.
இதனால், உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் எந்த திட்டமும் தங்களுக்கு இல்லை என மேற்கத்திய குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.