உக்ரைன் நீதித்துறை அமைச்சர் மீது ஊழல் புகார்: பிரதமர் அதிரடி
ஊழல் புகாரில் சிக்கியுள்ள உக்ரைன் நீதித்துறை அமைச்சர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை அமைச்சர் மீது ஊழல் புகார்
உக்ரைன் நீதித்துறை அமைச்சரான கெர்மான் கலுஷங்கோ (German Galushchenko), 100 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆற்றல் துறை சார்ந்த ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கெர்மான் மீது விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் பிரதமரான யூலியா ஸ்விரிடெங்கோ (Yuliia Svyrydenko) இன்று, புதன்கிழமை, தெரிவித்துள்ளார்.
Getty Images
இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் உக்ரைன் அதிகாரிகள் ஏழு பேரைக் கைது செய்துள்ளார்கள்.
நாடு தொடர்ந்து ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்குள்ளாகிவருவதுடன், ஏற்கனவே நாடு முழுவதும் நீண்ட மின்வெட்டுகளை மக்கள் எதிர்கொண்டுவரும் நிலையில், மின்சாரத் துறையில் நடந்ததாக கூறப்படும் 100 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஊழல் மக்களை கொந்தளிக்கவைத்துள்ளது.
கெர்மான், இதற்கு முன் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |