உலகை மூன்றாம் உலகப்போருக்குள் இழுக்க உக்ரைன் திட்டம்: ரஷ்ய உளவுத்துறை பகீர் குற்றச்சாட்டு
ரஷ்யா அல்ல, உக்ரைன்தான் உலகத்தையே மூன்றாம் உலகப்போருக்குள் இழுக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
உலகை மூன்றாம் உலகப்போருக்குள் இழுக்க திட்டம்
உக்ரைன், பால்டிக் கடலில் கப்பல் ஒன்றை ரஷ்ய கடற்படை கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்து, அந்தப் பழியை ரஷ்யா மீது போட்டு, நேட்டோ நாடுகளை போருக்குள் இழுக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவை பால்டிக் பகுதிக்குள் நுழைய விடாமல் தடுக்க நேட்டோ அமைப்பைத் தூண்டுவதற்காகவே இந்த திட்டம் என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
நேட்டோ அமைப்புடன் மோதல் ஏற்படுமானால், அது அணு ஆயுத தாக்குதலுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் ரஷ்ய எதிர்ப்பாளர்களையும், தொழிலதிபர்களையும் உக்ரைன் குறிவைத்துள்ளதாகவும், வெளிநாட்டவர்களை வைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்தப் பழியை ரஷ்யா மீது சுமத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது ரஷ்யா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |