இடத்தை நீங்கள் தேர்வு செய்யுங்கள்... நான் தயார்! ரஷ்ய அதிபர் புடினுக்கு உக்ரைன் ஜனாதிபதி அழைப்பு
உக்ரைன்-ரஷ்யா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்காக சந்திக்குமாறு புடினுக்கு Volodymyr Zelenskyy அழைப்பு விடுத்துள்ளார்.
ஜேர்மனியின் முனிச்சில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றி உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, இந்த நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வுக்கான வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் ரஷ்ய ஜனாதிபதி சந்திப்புக்கான இடத்தை தேர்வு செய்யலாம் என கூறினார்.
ரஷ்ய அதிபருக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியவில்லை, எனவே சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கிறேன்.
அமைதியான முறையில் தீர்வுக்கான, உக்ரைன் தொடர்ந்து தூதரக வழியில் மட்டுமே பயணிக்கும் என Volodymyr Zelenskyy திட்டவட்டமாக தெரிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி அழைப்பு குறித்து தற்போது வரை ரஷ்யா தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.