ட்ரோன், ஏவுகணை தாக்குதலால் பிராந்தியத்தில் 523,000 மக்கள் பாதிப்பு
உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதலினால், நூறாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்
போலந்தின் எல்லையில் இருக்கும் உக்ரேனியப் பிராந்தியம் Lviv. இது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு பிறகு தாக்குதலில் இருந்து தப்பிய பகுதி ஆகும்.
ஆனால் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் இலக்கு ஆங்காங்கே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதலினால் Lviv பிராந்தியத்தில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
ஆளுநர் Maksym Kozytsky
இதுகுறித்து ஆளுநர் Maksym Kozytsky "இப்போதைய நிலவரப்படி, Lviv பிராந்தியத்தில் 523,000 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்" என சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
மேலும் மேற்கு உக்ரைனின் மற்ற இடங்களான ரிவ்னே பகுதியில் 280,000 வீடுகளும், வோலின் பிராந்தியத்தில் 215,000 வீடுகளும் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் மேற்கில் உள்ள Ivano-Frankivsk பிராந்தியத்தில் முக்கியமான உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதுடன், Khmelnytsky பிராந்தியத்தில் வசிப்பவர்களும் மின்சாரம் இல்லாமல் இருந்தனர்.
இதற்கிடையில், உக்ரைனின் மின்சார Grid ஆபரேட்டரான Ukrenergo, சேதமடைந்த நெட்வொர்க்கை உறுதிப்படுத்தும் வேலையில் நாடு முழுவதும் அவசரகால மின்தடைகளை அறிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |