$6.6 பில்லியனுக்கு புதிய இராணுவ ஒப்பந்தம்: உக்ரைன்-பிரித்தானியா உறவில் புதிய அத்தியாயம்!
உக்ரைன்-பிரித்தானியா இடையே $6.6 பில்லியன் மதிப்புள்ள புதிய இராணுவ ஒப்பந்தம் முடிவாகி இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய ராணுவ உதவி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் இராணுவத்துக்கு பிரித்தானியா வழங்கும் புதிய இராணுவ உதவிகளை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவாக, குறைந்தது $3.6 பில்லியன் மதிப்புள்ள இராணுவ உதவிகளை இவ்விரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Ukraine secures $6.6 billion in military aid after talks with UK PM Starmer, says Zelenskyy
— NEXTA (@nexta_tv) January 16, 2025
Ukrainian President Volodymyr Zelensky announced that Ukraine and the UK have agreed on at least $3.6 billion in annual military assistance. Additionally, decisions have been made to… pic.twitter.com/Q3tUsqY4Y8
இது மட்டுமின்றி, ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து மேலும் $3 பில்லியன் தொகையை உக்ரைனுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்த ஆண்டு மட்டும் உக்ரைனுக்கு மொத்தம் $6.6 பில்லியன் மதிப்புள்ள இராணுவ உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
150 பீரங்கிகள்
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, வரும் வாரங்களுக்குள் 150 பீரங்கி அமைப்புகளை இங்கிலாந்து உக்ரைனுக்கு வழங்கும் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், டென்மார்க்குடன் இணைந்து "கிரேட்ஃபுல்" என்ற புதிய மொபைல் வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்கு பிரித்தானியா நிதி உதவி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |