போருக்கு நடுவே... வெளிநாடுகளில் ஆயுத ஏற்றுமதி அலுவலகங்கள் திறக்கும் உக்ரைன்
பெர்லின் மற்றும் கோபன்ஹேகனில் ஆயுத ஏற்றுமதி மற்றும் கூட்டு ஆயுத உற்பத்திக்கான அலுவலகங்களை இந்த ஆண்டு உக்ரைன் அமைக்கும் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஏற்றுமதி
ரஷ்யாவுடனான நான்காவது ஆண்டு போரில் அதன் படைகளைத் தடுக்கும் அதே வேளையில், உக்ரைன் அதன் மேற்கத்திய நேச நாடுகளின் உதவியுடன் அதன் வளர்ந்து வரும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையை விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், கடற்படை ட்ரோன்கள் மற்றும் பீரங்கி அமைப்புகள் ஆகியவை உக்ரைன் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயுதங்களாக இருக்கும் என ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது கூட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்பதை விளக்கிய ஜெலென்ஸ்கி, உக்ரைனிடம் பணம் இல்லாத பற்றாக்குறை பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு அதிக பணம் கிடைக்கும் பொருட்டு, நாமே விற்க அனுமதிக்கக்கூடிய ஆயுதங்கள் அவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற முக்கிய ஆயுதங்களுக்காக உக்ரைன் தற்போதும் அதன் நட்பு நாடுகளையே நம்பியுள்ளது. ட்ரோன் மற்றும் ஏவுகணை திட்டங்களை மேம்படுத்துவதில் உக்ரைன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
ட்ரோன் ஒப்பந்தம்
இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைன் தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஃபிளமிங்கோ மற்றும் ரூட்டா ஏவுகணைகளை பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்கா-உக்ரைன் ட்ரோன் ஒப்பந்தம் குறித்த மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக உக்ரைன் குழு அடுத்த வாரம் வாஷிங்டனுக்குச் செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கமான உறவை உருவாக்க உக்ரைன் தொடர்ந்து முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது. ஆனால், மறைமுக ரஷ்ய ஆதரவு நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் உறுதியாக உள்ளது என்றே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |