நள்ளிரவில் ரஷ்யா அனுப்பிய 137 ட்ரோன்கள்: போராடிய உக்ரைன் வான் பாதுகாப்பு படை
Ukraine shot down 137 Russian Drone: உக்ரைன் மீது ரஷ்யா நள்ளிரவில் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல்
நள்ளிரவில் கிட்டத்தட்ட 137 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ஒரியல், குர்ஸ்க், ஷாடலோவோ, மில்லெரோவோ, பிரிமோர்ஸ்கோ-அக்தார்ஸ்க் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க், கிரிமியா மற்றும் அசோவ் கடல் ஆகிய பகுதிகளில் இருந்து ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.

விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு
ரஷ்யா ஏவிய ட்ரோன்களில் கிட்டத்தட்ட 114 ஆளில்லா விமானங்களை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை படைகள், ஆளில்லா அமைப்பு பிரிவுகள் மற்றும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படைகள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டனர்.
பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தாலும், 17 இடங்களில் நேரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் உதிரி பாகங்கள் விழுந்ததில் 4 இடங்கள் சேதமடைந்துள்ளன.