ரஷ்யாவுக்கு பயத்தைக் காட்டிய உக்ரைன்: அணு உலையைச் சுற்றிலும் அகழிகள் தோண்டும் புடின்
உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்தவிடயம் ரஷ்யாவை பதறவைத்துள்ளது. தங்கள் நாட்டு அணு உலைகளை உக்ரைன் கைப்பற்றிவிடலாம் என்னும் அச்சத்தில், அணு உலைகளைச் சுற்றி அகழிகள் தோண்டு பணியைத் துவக்கியுள்ளது ரஷ்யா.
பயத்தைக் காட்டிய உக்ரைன்
உக்ரைனை ஊடுருவி பொதுமக்கள் உட்பட ஏராளமானோரைக் கொன்று குவித்தது ரஷ்யா. ஆனால், உக்ரைன் படைகள் புடினுக்கே பயத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்ய எல்லைக்குள்ளேயே நுழைந்துவிட்டன.
உக்ரைன் படைகள் எல்லை தாண்டி ரஷ்யாவுக்குள் நுழைய, ரஷ்யப் படையினர் உக்ரைன் படையினரிடம் சரணடையும் காட்சிகள் வெளியாகி புடினுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தின.
அகழிகள் தோண்டும் புடின்
இந்நிலையில், Kursk நகரில் அமைந்துள்ள அணு உலையை உக்ரைன் கைப்பற்றிவிடக்கூடும் என்ற அச்சம் ரஷ்யாவுக்கு உருவாகியுள்ளது.
Kursk அணு உலை, ரஷ்யாவுக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய அணு உலைகளுள் ஒன்றாகும். அதை உக்ரைன் கைப்பற்றுமானால், ரஷ்யாவுக்கு அதைவிட பெரிய அவமானம் ஒன்றும் இருக்காது.
அத்துடன், உக்ரைனுக்குச் சொந்தமான Zaporizhzhia அணு உலையை ரஷ்யா பிடித்துவைத்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் Kursk அணு உலையை உக்ரைன் படைவீரர்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உக்ரைனுக்குச் சொந்தமான Zaporizhzhia அணு உலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலாம் என புடினுக்கு அச்சம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மன்னர்கள் காலத்தில் கோட்டைகளைச் சுற்றி அகழிகள் என்னும் பள்ளங்களைத் தோண்டி, அவற்றில் நீர் நிறைத்து, அவற்றில் பயங்கர முதலைகளை விட்டுவிடுவார்கள்.
அதேபோல, தற்போது Kursk அணு உலையை உக்ரைன் படைவீரர்கள் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, அந்த அணு உலையைச் சுற்றிலும் ரஷ்யா அகழிகள் தோண்டிவருகிறது.
அகழிகள் தோண்டும் காட்சிகள் சேட்டிலைட் புகைப்படங்களில் வெளியாகியுள்ளதைக் காணலாம். ஆக மொத்தத்தில், புடினுக்கு உக்ரைன் பயத்தைக் காட்டிவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |