முதன்முறையாக போர்க்களத்தில் வீரரை ட்ரோன் மூலம் மீட்ட உக்ரைன்
Ukraine carries out first ever aerial drone evacuation: உக்ரைன் காயமடைந்த வீரரை முதன்முறையாக ட்ரோன் மூலம் வான்வழியாக மீட்டுள்ளது.
காயமடைந்த வீரர் ஒருவரை முதன் முறையாக போர்க்களத்தில் ட்ரோன் மூலம் உக்ரைன் மீட்டுள்ளது.
காலாட்படை வீரர்
உக்ரைனின் காலாட்படை வீரர் ஒருவர் கிழக்கு கார்கிவ் போர்க்களத்தில் தனியாக இருந்தபோது காயமடைந்தார்.
கோஸ்ட்யா என்ற புனைப்பெயர் கொண்ட அந்த நபர், ரஷ்யாவின் தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களால் சூழப்பட்டிருந்திருக்கிறார்.
மேலும் அப்பகுதியில் கண்ணிவெடிகள் அதிக அளவில் புதைக்கப்பட்டிருந்ததால், அவரை மீட்புக்குழு அல்லது தரைவழி வாகனத்தினால் பாதுகாப்பாக மீட்க முடியவில்லை.
இதன் காரணமாக தளபதிகள் பெரிதும் மாற்றியமைக்கப்பட்ட குண்டுவீச்சு ட்ரோன் ஒன்றை பயன்படுத்த முடிவு செய்தனர்.
சிறிய தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்கள்
எதிரி விமானங்களைப் பிடிப்பதற்காக வலைகளுடன் ஆயுதம் ஏந்திய சிறிய தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் குவாட்கொப்டர்களின் அணிவகுப்பால் சூழப்பட்ட அந்த சாதனம் கோஸ்ட்யாவின் அருகில் தரையிறங்கியது.
அதில் ஏறி அந்த வீரர் அப்பகுதியில் இருந்து தப்பித்தார். போர்க்களத்தில் முதல் முறையாக உக்ரைன் இந்த நடவடிக்கை மூலம் வீரரை மீட்டுள்ளது.
கோஸ்ட்யா வெற்றிகரமாக வெளியேற்றும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்; மேலும் தற்போது சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெற்று வருகிறார்.
