ஒரே இரவில் மாஸ்கோவை நோக்கி சீறிப்பாய்ந்த 390 ட்ரோன்கள்
உக்ரைன் சுமார் 400 ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தியது.
390 ட்ரோன் விமானங்கள்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை உக்ரைனின் 390 ட்ரோன் விமானங்கள் ஒரே இரவில் தாக்கியுள்ளன.
அதேபோல் தென்மேற்கு பெல்கோரோட் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில், குறைந்தது 19 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் குறித்து பேசிய மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், 'திங்கட்கிழமை இரவு முதல் மாஸ்கோவின் பரந்த பகுதிக்கு மேலே 390 ட்ரோன் விமானங்கள் கண்காணிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டன' என்றார்.
உயிரிழப்புகள் எதுவும் இல்லை
ஆனால், அவற்றால் எந்த சேதமோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆன்ட்ரி வேரோபியோவ், செக்கோவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் ட்ரோன் விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறினார்.
கட்டிடத்தின் முகப்பு மற்றும் இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |