ரஷ்யாவின் இரசாயன ஆலையை தாக்கியிருக்கிறோம் - உக்ரைன் இராணுவ உளவுத்துறை
Ukraine strike on KuibyshevAzot oil plant: ரஷ்யாவின் பிராந்தியம் ஒன்றில் இரசாயன ஆலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் இராணுவ உளவுத்துறை, ரஷ்யாவின் சமாரா இரசாயன ஆலை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.
இரசாயன ஆலை
ரஷ்யாவின் சமாரா பிராந்தியத்தில் உள்ள இரசாயன ஆலை மீது உக்ரைன் இராணுவம் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது.

டோல்யாட்டியில் அமைந்துள்ள KuibyshevAzot என்ற அந்த இரசாயன ஆலையானது, வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்களுக்கான மூலப்பொருட்களைத் தயாரித்து வந்ததாக உக்ரேனிய இராணுவ உளவுத்துறை தெரிவித்தது.
லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் மாஸ்கோவால் நியமிக்கப்பட்ட தலைவரான லியோனிட் பாசெக்னிக், உக்ரேனிய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகக் கூறினார்.
அதே சமயம், உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கொலோமிட்சி கிராமத்தை தங்கள் படைகள் கைப்பற்றியதாகவும், உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ விமான நிலையங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.