ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்
Ukraine strike on Kirishinefteorgsintez woman killed: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் லெனின்பிராட்டில் பெண்ணொருவர் பலியானார்.
ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
ரஷ்யாவின் வடமேற்கு பகுதியான லெனின்கிராட் பிராந்தியத்தில் Kirishinefteorgsintez என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும்.
இதன் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. 2024-யில் இந்த ஆலை ரஷ்யாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு அளவில் கிட்டத்தட்ட 7 சதவீதம், அதாவது நாளொன்றுக்கு 350,000 பீப்பாய்களை சுத்திகரித்ததாக மதிப்பிடப்பட்டது.
வடகிழக்கே Vsevolozhsk நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது ட்ரோனின் சிதைவுகள் விழுந்ததில், பெண்ணொருவர் இறந்ததாக ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ தெரிவித்தார்.
மேலும், கட்டிடத்தில் இருந்த மற்ற குடியிருப்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் Kirishinefteorgsintez சுத்திகரிப்பு ஆலையை உக்ரைன் பலமுறை தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.