தொடரும் உக்ரைனின் பதிலடி தாக்குதல்கள்: அடுத்தடுத்து சேதமாகும் ரஷ்ய கப்பல்கள்
கிரிமியாவில் ரஷ்யாவின் இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைன் உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போரின் சமீபத்திய நிகழ்வாக ரஷ்யாவின் போர் கப்பலை உக்ரைன் ஏவுகணைகள் தாக்கின.
இதனை ரஷ்யா உறுதிப்படுத்தி இருந்தது ஆனால் லேசான சேதம் மட்டுமே ரஷ்ய போர் கப்பலுக்கு ஏற்பட்டதாக தெரிவித்தது.
அத்துடன் மொத்தமாக ஏவப்பட்ட 15 உக்ரைனிய ஏவுகணைகளில் 13-ஐ ரஷ்ய வான் தடுப்பு சாதனங்கள் தடுத்து விட்டதாகவும் ரஷ்யா தெரிவித்தது.
ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்
இந்நிலையில் கிரிமியாவில் இரண்டு ரஷ்ய கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைனின் புலனாய்வு இயக்குனரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதனடிப்படையில் கிரிமியாவின் யெவ்படோரியா மாவட்டத்தில் அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு தரையிறங்கு கப்பல்கள் சேதமடைந்தன என தகவல் வெளியாகியுள்ளது.
Ukraine's Main Directorate of Intelligence confirmed the strike on two boats in Crimea
— NEXTA (@nexta_tv) November 10, 2023
Two landing boats were reportedly hit in the early morning in the village of Chernomorskoye in the Yevpatoria district. pic.twitter.com/GuK1TPv5N4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |