ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையைத் தாக்கிய ட்ரோன்கள்: உக்ரைன் மீது குற்றச்சாட்டு
மேற்கு சைபீரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக கூறப்படுகிறது.
பெட்ரோ இரசாயன ஆலை
ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் உள்ளது.

ஆலை ஒன்றின் மீது பல ட்ரோன்கள் மோதியதாகவும், அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் ட்யூமென் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் மூர் உறுதிப்படுத்தினார்.
ஆனால், அவர் அந்த இடத்தின் பெயரை குறிப்பிடவில்லை. அதே சமயம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் பெட்ரோ இரசாயன ஆலைக்கு மேலே அடர்த்தியான புகை மேகங்கள் எழுவதாகக் கூறப்படுகிறது.
சிபூர் பெட்ரோ இரசாயன நிறுவனத்தின் ஒரு பகுதியான ஸாப்ஸிப்நெஃப்டெகிம் ஆலையை ட்ரோன்கள் குறிவைத்ததாக சரிபார்க்கப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காலவரையின்றி
ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை தாக்கப்பட்டதாக சுயாதீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளன ஆலை, சேதத்தின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தொழிற்சாலை வட்டாரம் ஒன்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
இதற்கிடையில், திங்கட்கிழமை அதிகாலையில் இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறிய உக்ரைன், ட்யூமென் பிராந்தியத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |