ரஷ்யாவின் டேட்டா சென்டர்களை தாக்கிய உக்ரைன் - கோடிக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு
Ukraine Strikes Russia Data Centres, Chaos Ensues: ரஷ்யாவின் டேட்டா சென்டர்களை உக்ரைன் தாக்கியதால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டேட்டா சென்டர்களை குறிவைத்து தாக்குதல்
உக்ரைன், ரஷ்யாவின் முக்கிய இணைய நிறுவனமான யாண்டெக்ஸ் (Yandex)-க்கு சொந்தமான டேட்டா சென்டர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், ரஷ்யாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் காரணமாக, பலருக்கு வங்கி பயன்பாடுகள், டிஜிட்டல் கதவுகள், டாக்ஸி சேவைகள், உணவு ஆர்டர் செயலிகள் அனைத்தும் செயலிழந்தன.
சிலர் தங்கள் வீடுகளுக்குள் நுழைய முடியாமல் தவித்தனர். சிலர் தங்கள் சேமிப்புத் தொகையை பயன்படுத்த முடியாமல், உணவு வாங்கவும், வாடகை செலுத்தவும் சிரமப்பட்டனர்.
யாண்டெக்ஸ் நிறுவனம், “டேட்டா சென்டர்கள் எங்கள் சேவைகளின் இரும்பு இதயம்” என்று கூறி, சேவைகளை மீண்டும் இயங்கச் செய்ய முயற்சி செய்து வருகிறது. ஆனால், மூன்று முக்கிய டேட்டா சென்டர்கள் சேதமடைந்ததால், பல சேவைகள் இன்னும் முழுமையாக இயங்கவில்லை.
இந்த தாக்குதல், ரஷ்யா முன்னதாக உக்ரைனின் டேட்டா சென்டர்களை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு பதிலடி எனக் கருதப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “ரஷ்யா உக்ரைனியர்களை இணையம் இன்றி வாழ வைக்க முயற்சிக்கிறது, அதற்கு பதிலடி கொடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலால், யாண்டெக்ஸ் பே (Yandex Pay) போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகள் செயலிழந்ததால், மக்கள் தங்கள் பணத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
டாக்ஸி சாரதிகள் கூட தங்கள் வருமானத்தைப் பார்க்க முடியாமல், சேவைகள் குழப்பமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கி ஸ்பெர்பாங்க் (Sberbank) மற்றும் VK நிறுவனங்களின் டேட்டா சென்டர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த சம்பவம், இணைய அடிப்படை வசதிகள் மீது போர் தாக்குதல்கள் எவ்வளவு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை உலகிற்கு காட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |