ரஷ்யா விமானத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன்! வெளியான பரபரப்பு வீடியோ
ரஷ்யாவில் உள்ள விமானத்தளம் ஒன்றின் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக இணையத்தில் வீடியோ வெளியாகியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மீது 2வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், யாருடைய உதவியுமின்றி தாங்களே தங்களது நாட்டை பாதுகாத்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், புடினை பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் அளவிற்கு கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் படி உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்து வந்தாலும், முதல் நாள் ரஷ்யாவில் எந்தவித சம்பவமும் இடம்பெறாமல் இருந்தது.
இந்நிலையில், 2வது நாளான இன்று ரஷ்யாவின் Rostov பகுதியில் உள்ள விமானத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் Rostov பகுதியில் உள்ள விமானத்தளம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
Airfield in Russia's Rostov region hit by apparent Ukrainian attack; no word from Russian officials pic.twitter.com/FBYxEW3XkI
— BNO News (@BNONews) February 25, 2022
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
அதேசமயம், இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா தரப்பிலிருந்து தற்போது வரை எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.