குண்டுவெடிப்பில் நிலம் அதிர்ந்தது! அடுத்து என்ன நடக்கும்? உக்ரைனில் வசிக்கும் தமிழர் சொன்ன முக்கிய தகவல்
உக்ரைனில் வசிக்கும் தமிழ் மாணவர் ஒருவர் அங்கு நிலவும் சூழல் குறித்து பதற்றத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்த முத்தமிழ் என்பவர் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார். அவர் கூறுகையில், வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 50 கிமீ தூரத்தில் குண்டு வெடித்தது.
அதனால் தொடர்ந்து இப்பகுதியில் நிலம் அதிர்வதை எங்களால் உணர முடிகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
தற்போது இப்பகுதியில் போக்குவரத்து சேவை இல்லை. மேலும் உள்ளூர் மக்கள் கடைவீதிகளில் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். இதனால் எங்களால் எளிதில் தேவையானவற்றை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.
தமிழ்நாட்டு மாணவர்கள் சுமார் 150 பேர் உட்பட இந்தியாவின் பிற பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்டவர்கள் எங்கள் கல்லூரியில் படிக்கின்றனர். வெகுவிரைவில் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.