உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல்: குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு
உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணைகள் ரஷ்யாவின் முக்கிய தளங்களை குறிவைத்து அளித்துள்ளது.
ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட தகவலில், உக்ரைனிய படைகள் ரஷ்யாவின் ஆழமான எல்லைகள் வரை புகுந்து வெற்றிகரமாக நீண்ட தூரத் தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில், உள்நாட்டு தயாரிப்பான பிளமிங்கோ(Flamingo) ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யாவின் ராணுவ மற்றும் தொழில்துறை கட்டமைப்புகளை வெற்றிகரமாக அழித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ரோஸ்காஸ்மோஸ் (Roscosmos) நிறுவனத்தின் கீழ் இயங்கும் விண்வெளி மின்னணுவியல் தொழிற்சாலையான புரோகிரெஸ் சென்டரை உக்ரைனிய படைகள் வெற்றிகரமாக தாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோஸ்காஸ்மோஸ் தளமானது உக்ரைனிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 700 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உக்ரைன் எல்லையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதும் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் போர் திறனை சிதைப்பதே இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |