ரஷ்ய படைகளுக்கு எதிராக துப்பாக்கி தூக்கிய உக்ரைன் பெண்: போருக்கு தயாராகும் பொதுமக்கள்!
ரஷ்யா உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனில் உள்ள பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொல்வதற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றமானது அதிகரித்து வருவதால் இன்னும் சில தினங்களில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் என மேற்கு நாடுகள் சேர்ந்த சில உளவு அமைப்புகள் உக்ரைனை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பலநாடுகளும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைன் விட்டு உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டு வருகின்றனர்.
Ukrainian women are taking up self defence courses amid Russian threat pic.twitter.com/p8tz2lpOLe
— The Sun (@TheSun) February 13, 2022
இது ஒருபுறம் இருக்க, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உடன் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் ஒரு தீர்வு எட்டமுடியாத நிலையே நீடிக்கிறது. இந்த சூழ்நிலை உக்ரைனை சேர்ந்த மக்கள் தங்களை ரஷ்ய படைகளிடம் இருந்து தற்காத்து கொல்லவதற்க்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட பெண் ஒருவர் பேசுகையில் எங்கள் நாட்டு எல்லையில் ரஷ்யா அதிகமான படைகளை குவித்து வருவதாக தற்போது வந்துள்ள செய்தி எங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இந்த அச்சத்திற்காக எங்களால் நாங்கள் நேசிக்கும் இந்த கார்க்கோவ் நகரை விட்டு செல்லமுடியாது அதேசமயம் ரஷ்யா உக்ரைன் மேல் போர் தொடுதல் எங்களை தற்காத்து கொல்வதற்காக இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் நாட்டு மக்களுக்கு இந்த பயிற்சியை அந்த நாட்டு ராணுவம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.