ரஷ்யாவுக்குள் 30 கி மீ ஊடுருவிய உக்ரைனிய படைகள்: “பெடரல் எமர்ஜென்சி” அறிவிப்பு
உக்ரைனிய படைகள் ரஷ்யாவின் பரப்பளவுக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் வரை உட்புகுந்து அதிர்ச்சியளித்துள்ளனர்.
ரஷ்யாவிற்குள் புகுந்த உக்ரைன்
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் எதிர்ப்பு தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
போர் நடவடிக்கையின் தற்போதைய நிலவரமாக, உக்ரைனிய தரைப்படை மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட ஆயுதப் படை வீரர்கள் சர்வதேச எல்லையை கடந்து சுமார் 30 கிலோ மீட்டர் வரை ரஷ்ய நாட்டின் பரப்பளவுக்குள் உட்புகுந்துள்ளனர்.
இருநாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
உக்ரைனிய படையின் சுமார் 1000 வீரர்கள் வடகிழக்கு உக்ரைனின் சுமி பிராந்திய பகுதியில்(Sumy Oblast region) இருந்து முன்னேறி ரஷ்யாவின் குர்ஸ்க்(Kursk) பிராந்திய பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இந்த முன்னேற்றத்தின் போது உக்ரைனிய படைகள் எதிரிகளின் எல்லைப் பகுதிக்குள் இயந்திரமயமாக்கப்பட்ட ஆயுதப்படைகளின் முன்னேற்றத்துடன் தீவிரமான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
போர் ஆய்வுக்கான நிறுவனமான (The Institute for Study of War) உக்ரைனிய படைகளின் முன்னேற்றத்தை ஆதாரங்களின் அடிப்படையில் புகைப்படம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் அவசர நிலை
உக்ரைனிய படைகளின் ஊடுருவலை உடனடியாக தடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைனிய படைகளின் கருதுகோள் என்ன என்று தெளிவாக தெரியவில்லை, ஆனால் போர் தொடங்கிய பிறகு ரஷ்ய அதிபருக்கு இது மிகப்பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு துருப்புகளை விரட்டியுள்ளதோடு “பெடரல் எமர்ஜென்சியை” ரஷ்யா அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |